பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கமல்ஹாசன் தன்னுடைய கனவு படமான மருதநாயகம் படத்தை மீண்டும் கையில் எடுக்கப்போவதாகவும், அதில் முக்கிய ரோலில் ரஜினியும் நடிக்க போவதாகவும் வந்த தகவலை கமல்ஹாசன் மறுத்துள்ளார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், 1997-ல் கமல்ஹாசன் மருதநாயகம் என்ற படத்தை இங்கிலாந்து ராணி எலிசபத்தை வைத்து பிரம்மாண்டமாக தொடங்கினார். சரித்திரத்தை பின்னணியாக கொண்டு உருவான இப்படம், பின்னர் பட்ஜெட் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து இப்படத்தை எடுக்க கமல்ஹாசன் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் “மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும், இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை கமல் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து கமல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கிறார். அதற்கு அடுத்து தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார். மற்றபடி அவர் மீண்டும் மருதநாயகம் படத்தை துவங்கபோவதாகவும், அதில் ரஜினி நடிக்கப்போவதாகவும் வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.