சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது அதே படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார்.
மம்முட்டி கேரக்டரில் அரவிந்த்சாமியும், நயன்தாரா கேரக்டரில் அமலாபாலும் நடிக்கிறார்க்ள. இவர்கள் தவிர நிகிஷா பட்டேல், சூரி, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. தற்போது டப்பிங் மற்றும், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இதன் டீசரை வெளியிட இருக்கிறார்கள். புத்தாண்டு அல்லது பொங்கலுக்கு படம் வெளிவருகிறது. "படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி முடிந்திருக்கிறது. தமிழுக்காக சின்ன சின்ன மாறுதல்களை செய்துள்ளேன். மலையாளத்தை விட இதில் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்திருக்கிறேன். இது தமிழ் மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்" என்கிறார் சித்திக்.