புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
லண்டனில் இந்திய திரைப்பட விழா ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22ந் தேதி முதல் 29ந் தேதி வரை லண்டனில் நடக்கிறது. அதேபோன்று இங்கிலாந்தில் உள்ள மற்றொரு நகரமான பிரிமிங்கமில் 23ந் தேதி முதல் ஜூலை 2ந் தேதி வரை நடக்கிறது. இரண்டு திரைப்பட விழாக்களிலும் தமிழில் தயாராகி உள்ள டிக்கெட் என்ற படம் திரையிடத் தேர்வாகி உள்ளது.
இந்தப் படத்தை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் ராகவ் ரங்கநாதன் இயக்கி உள்ளார். எந்திரன், நஞ்சுபுரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ராகவ், டி நம்பர் ஒண், மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் மூலம் புகழ்பெற்றவர்.
இதில் ராகவ் ரங்கநாதன், கார்த்திக் குமார், லட்சுமிப்ரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா ரஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நவ்னீத் சுந்தர் இசை அமைத்துள்ளார், ராஜா பட்டாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி, ஹரிஷ் ராகவேந்திரா பாடல்களை எழுதியுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் தயாராகி உள்ளது. இரண்டு நண்பர்களுக்கு இடையிலான நட்பு. வாழ்க்கைக்கும், மரணத்துக்குமான இடைவெளி இவற்றை மையமாக கொண்டு தயாராகி உள்ளது.