பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படம் 'ஜனநாயகன்'. இப்படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வர இன்னும் 25 நாட்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது சில வெளிநாடுகளில் 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது.
அதில், ஜெர்மனியில் இப்படம் சில தினங்களில் 5.5 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சில வெளிநாடுகளில் விறுவிறுப்பான டிக்கெட் முன்பதிவு நடப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும், இப்படத்தின் 'தளபதி கச்சேரி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.