டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை | 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா | உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில் | கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்… |

தெலுங்கு திரைகலகில் நடிகர், இயக்குனர் என ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர் ராகுல் ரவீந்திரன். பின்னணி பாடகி சின்மயின் கணவரும் கூட. ராகுல் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் 'தி கேர்ள் ப்ரெண்ட்' என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் உடன் சோசியல் மீடியாவில் உரையாடிய பல ரசிகர்கள், இந்த படத்தின் ஸ்கிரிப்டை ரசிகர்களின் பார்வைக்காக வெளியிடுங்கள் என்று கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அவரது கோரிக்கையை ஏற்றுள்ள ராகுல் ரவீந்திரன் இந்த படத்தில் மொத்த ஸ்கிரிப்டையும் ஆன்லைனில் பதிவேற்றி அதற்கான லிங்கை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறும்போது, ''பல ரசிகர்களிடமிருந்து இது போன்ற கோரிக்கை வந்தது. இதோ உங்களுக்காக படப்பிடிப்புக்கு நாங்கள் செல்வதற்கு முன்பாக எழுதப்பட்ட இறுதி திரைக்கதையை இந்த லிங்கில் கொடுத்திருக்கிறேன், நீங்கள் இதை படித்துப் பார்க்கும்போது இந்த காட்சிகள் படத்தில் எப்படி உருவாக்கப்பட்டுள்ளன, என்ன விஷயங்கள் எல்லாம் படப்பிடிப்பின் போதும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதை உணர முடியும்.
இதில் இருக்கும் சில காட்சிகள் சில காரணங்களால் படத்தில் இடம்பெறாமல் போயிருக்கின்றன. இந்த திரைக்கதை நீங்கள் படிக்கலாமே தவிர இதை மறு உருவாக்கம் செய்வதோ மறு வெளியீடு செய்வதோ கூடாது நீங்கள் நிச்சயமாக இதை ரசித்து படிப்பீர்கள் என நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.