புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
அர்ஜுன் சர்ஜா என்ற பெயரில் கன்னடப்படங்களில் நடித்து வந்தவரை அர்ஜுன் என்று பெயரை மாற்றி 'நன்றி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார் ராமநாராயணன். 1984 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான அர்ஜுன், கிட்டத்தட்ட 33 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது நடித்திருக்கும் 'நிபுணன்' படம் அர்ஜுனின் 150 ஆவது படமாக வெளிவர உள்ளது.
அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜூனுடன் இணைந்து பிரசன்னா, வைபவ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 'கப்பல்' படத்தை தயாரித்த 'பேஸன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.
நிபுணன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதற்கு முன்னதாக விரைவில் எஸ்.நவீன் இசையமைப்பில் உருவாகியுள்ள 'நிபுணன்' படத்தின் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
நிபுணன் படத்தை அர்ஜுனின் 150 ஆவது படம் என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்து வருகின்றனர். இதே படத்தை கன்னடத்திலும் 150 ஆவது படம் என்று விளம்பரம் செய்கின்றனர். நிபுணன் தமிழ்ப்படமா? கன்னடப்படமா?