பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அஜித்தைப் பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களின் ஒவ்வொரு விசயங்களும் வியாழக்கிழமைகளில் தான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அது அவருக்கு ஒர்க் அவுட்டாகி வருவதால் தொடர்ந்து அந்த செண்டிமென்ட்டை கடைபிடித்து வருகிறார். அதோடு, வீரம் வெற்றிக்குப்பிறகு வேதாளம், விவேகம் என் வி எழுத்திலேயே அவர் நடிக்கும் படங்களில் டைட்டில் வைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், விஜய்க்கும் ஒரு செண்டிமென்ட் உள்ளது. அவர் நடித்த படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வந்தால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் என்கிறார்கள். அந்த வகையில், இதற்கு முன்பு விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பல படங்கள் அவருக்கு வெற்றியைத்தான் கொடுத்துள்ளன. அதனால், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 61வது படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இந்த படமும் அவருக்கு கண்டிப்பாக சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று அவரது தரப்பில் அடித்து சொல்கிறார்கள்.