ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழகம்-கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரியாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
பென்னி குக் என்ற ஆங்கிலேயர், தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லை பெரியாறு அணையை கட்டினார். நூற்றாண்டை கடந்து இருக்கும் இந்த அணை, தமிழ்நாட்டின் ஜீவாதார அணைகளில் ஒன்று. இந்நிலையில் அணை வலுவிழந்து உள்ளதாகவும், உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், உடனே அணையை உடைத்து, புது அணை கட்ட வேண்டும் என்று கூறி வருகிறது கேரள அரசு. மேலும் அதற்கான முயற்சியிலும் அம்மாநில அரசு இறங்கியிருக்கிறது. கேரளாவின் இந்த செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதுதொடர்பான வழக்கும் நீண்ட நாட்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கேரளா சேர்ந்த டைரக்டர் சோஹன் ராய், ஆங்கிலத்தில் டேம் 999 என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தபடம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தவாரம் வெளியாக இருக்கிறது. படத்தில் அணை உடைவது போலவும், அதிலிருந்து வெளியாகும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும் என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
படம்குறித்து டைரக்டர் சோஹன் ராய் அளித்துள்ள பேட்டியில், சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழக-கேரளா இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் வேளையில், சோஹன் ராயின் டேம் 999 படமும், அதற்கு அவர் கொடுத்துள்ள பேட்டிம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ம.தி.மு.க. ரகளை : இதனிடையே இப்படத்தின் பிரிவியூ காட்சி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இதை திரையிடக்கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பிரிவியூ காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தபடத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.