இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
சினிமாவில் தனது 50வது ஆண்டை முன்னிட்டு, தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்த பாடகர் கேஜே.ஜேசுதாஸ்க்கு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாத பூஜை செய்தார்.
தமிழ் சினிமாவில் ‛பாடும் நிலா' என்று அழைக்கப்படுவர் எஸ்பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர்., நடித்த அடிமைப்பெண் படத்தில் ‛ஆயிரம் நிலவே வா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர் முன்னணி பாடகராக உயர்ந்த எஸ்பிபி., தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.
சினிமாவில் 50வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார் எஸ்பிபி. இதையொட்டி சென்னை, ஆர்கேவி., ஸ்டுடியோவில் ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் தன் மனைவியுடன் கலந்து கொண்டனர்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எஸ்.பி.பி., மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். எஸ்பிபி.,யின் திறமையை கண்டு அவரை சினிமாவில் அறிமுகம் செய்ய உறுதுணையாக இருந்தவர் யேசுதாஸ். ஆகையால் தனது 50 வருட சினிமா பயணத்தை முன்னிட்டு யேசுதாஸை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பாத பூஜை செய்தார் எஸ்.பி.பி. சென்னை ஆர்கேவி., ஸ்டுடியோவில் நடந்த நிகழ்ச்சியில் யேசுதாஸ் உடன் அவரது மனைவியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் எஸ்பிபி., தான் பாடிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள், சகபாடகர்கள், தொழில்நுட்பகலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.
1966-ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதன்முதலாக விஜயா கார்டனில்(தற்போது ஆர்கேவி ஸ்டுடியோ) தன் முதல் பாடலை பாடினார். ஆகையால் தான், இந்த நிகழ்ச்சியை இங்கு நடத்தியிருக்கிறார் எஸ்பிபி., என்பது ஹைலைட்!