சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாரத பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் என்று அறிவித்த பிறகு கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கறுப்பு பணம் பற்றி ஒரு படம் முழுக்க பேசியவர் கண்ணதாசன்.
1964ம் ஆண்டு அவர் கதையில் உருவான கறுப்பு பணம் படம்தான் சாதாரண மக்களக்கு கறுப்பு பணம் என்றால் என்ன என்பதை சுட்டிக்காட்டியது. ஒரு கூட்டம் பணக்காரர்களிடமிருக்கும் கறுப்பு பணத்தை கொள்ளை அடித்து நல்ல காரியத்துக்கு பயன்படுத்தும். கொள்ளையடிக்கப்பட்டது கறுப்பு பணம் என்பதால் பறிகொடுத்தவர்களால் எந்த புகாரும் தர முடியாது. இறுதியில் கறுப்பு பண கொள்ளைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அப்போது கூட்டத்தின் தலைவன் கறுப்பு பணம் பற்றி பேசும் காட்சிகள் அப்போது மிகவும் பிரபலம்.
கண்ணதாசன் கதைக்கு வலம்புரி சோமநாதன் திரைக்கதை அமைத்திருந்தார். ஜி.ஆர்.நாதன் இயக்கி இருந்தார். கே.பாலாஜி, ஷீலா, கே.ஆர்.விஜயா, டி.எஸ்.பாலய்யாவுடன் கண்ணதாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..." என்ற பாடல் இந்தக் காலத்திற்கும் பொருந்தும்...
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்&இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை&நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொது உடைமை...
என்பது போன்ற அருமையான கருத்துக்கள் இடம் பெற்ற பாடல் அது. இந்தக் காலத்துக்கும் ஏற்ற படம் கறுப்பு பணம். யாராவது மறு திரையீடு செய்தால் நல்ல வரவேற்பை பெற வாய்ப்பிருக்கிறது.




