Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவன்சங்கர்ராஜா காட்டில் மீண்டும் இசைமழை

15 அக், 2016 - 18:04 IST
எழுத்தின் அளவு:
Yuvan-Shankar-Raja-again-bust

தன் அம்மாவின் மரணம் காரணமாக கடும் சோகத்தில் இருந்த யுவன் இசையமைப்பதில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். அதனால் அவரை வைத்து படம் பண்ணிய பல இயக்குநர்கள் வேறு இசையமைப்பாளர்களை தேடிப்போனார்கள். தற்போது தன் அம்மாவின் இழப்பிலிருந்து மீண்டு வந்துவிட்ட யுவன், பழையபடி சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


தற்போது யுவனின் ஆல்பங்கள் அடுத்தடுத்த வெளியாக உள்ளன. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028' செகன்ட் இன்னிங்ஸ் படத்தின் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளன. இப்படத்தில் இடம்பெறும் 'சொப்பன சுந்தரி' பாடல் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அடுத்து, கிருஷ்ணா, சுவாதி நடிக்கும் 'யாக்கை' படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஆல்பமும் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இவை தவிர யுவன் இசையில் செல்வராகவன் இயக்கி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஆல்பமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து பர்மா, மற்றும் 'ஜாக்சன் துரை' படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் தொடங்க உள்ள படத்துக்கும் யுவன் இசையமைக்கிறார். மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் கமிட்டாகி இருக்கிறார் யுவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in