'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
மறைந்த நடிகர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் ராதா. சமீபத்தில் இவருக்கு எதிராக சென்னையைச்சேர்ந்த உமாதேவி என்ற பெண், எனது கணவர் முனிவேலை, நடிகை ராதா என்னிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அதனால் எனது கணவரை ராதாவிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மாம்பலம் மகளிர் காவல் நிலையத்திலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும புகார் மனு அளித்திருந்தார். அதையடுத்து, நடிகை ராதாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதன்பிறகும் நடிகை ராதா தனது கணவருடன் போனில் பேசுவதாகவும், அவர் தனக்கு மிரட்டல் விடுப்ப தாகவும் உமாதேவி காவல் நிலையத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று வைரம் என்கிற ரவுடி, வாட்ஸ் அப்பில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு புகாரை காவல் நிலையத்தில் வாய்ஸ்சுடன் அளித்துள்ளார் நடிகை ராதா. அதில், முனிவேலை விட்டு பிரியுமாறு ஒரு ஆண் குரல் எச்சரிக்கை விடுப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், இதை யடுத்து, அவர் குறிப்பிட்டுள்ள ரவுடி வைரம் என்பவரின் மனைவியான லீலா, என் கணவர் புழல் சிறையில் இருக்கிறார். அவரால் எப்படி ராதாவிடம் போனில் பேச முடியும். இந்த விசயத்தில் தேவையே இல்லாமல் என் கணவர் மீது நடிகை ராதா புகார் சொல்கிறார் என்று தனது சார்பில் ஒரு புகாரை அளித்திருக்கிறார்.
ஆக, நடிகை ராதா விவகாரம் தற்போது பல அடுக்கு பிரச்சினைகளாக உருவெடுத்து விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கிறது.