‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
சுப்ரமணியபுரம் ஸ்வாதி, அதன்பிறகு போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன் என பல படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் திரி, யாக்கை போன்ற படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் அவரது மார்க்கெட் மந்தமாகி விட்டது. அதனால் தனது தாய்மொழியான தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஸ்வாதி, தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் அல்லரி நரேசுடன் நடிக்கும் படத்தில் அவ ருக்கு அழுத்தமான வேடமாம்.
மேலும், சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஸ்வாதியை சிலர் படம் தயாரிக்குமாறு சொன்னபோது மறுத்து விட்டாராம். ஆனால், ஐதராபாத்தில் படப்பிடிப்புக்காக ஒரு பெரிய பங்களாவை கட்டி விட்டிருக்கிறாராம். அந்த பங்களாவில் படங்களின் படப்பிடிப்புகள் அவ்வப்போது நடக்கிறதாம். இதுதவிர மேலும் சில ஏரியாக்களில் நிலங்களை வாங்கியிருக்கும் ஸ்வாதி, அந்த இடங்களிலும் சினிமா சம்பந்தமான ஸ்டுடியோக்கள் கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறாராம்.