பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக வெயிட் போட்டு நடித்த அனுஷ்கா, அதையடுத்து ராஜமவுலியின் பாகுபலி-2வுக்காக பல மாதங்களாக டயட்ஸ், உடற்பயிற்சி செய்து உடம்பை மீண்டும் ஸ்லிம் பண்ணி விட்டார். தற்போது பாகுபலி-2வில் பிசியாக நடித்து வருகிறாார். அதைத் தொடர்ந்து இன்னொரு அருந்ததி என்று அனுஷ்கா நினைக்கும் பாஹ்மதி என்ற படத்திலும் நடிக்கப் போகிறார் அனுஷ்கா.
இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத்தின் 57-வது படத்திலும் அனுஷ்கா நடிக்கயிருப்பதாக ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வந்தபோதிலும், தற்போது அது உறுதியாகியிருப்பதாக தெரிகிறது. காரணம், இதுவரை தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயரும் அனுஷ்காவுடன் சேர்ந்து அடிபட்டது. ஆனால் மேற்படி நடிகைகள்தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அனுஷ்காதான் இதுவரை அஜீத் படம் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது, பாகுபலியை முடித்த கையோடு அஜீத்தின் புதிய படத்தில் அனுஷ்கா நடிப்பதாக சொல்கிறார்கள். தற்போது அனுஷ்காவின் மார்க்கெட் தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவரான டைரக்டர் சிவா, அனுஷ்கா நடித்தால் தெலுங்கு வியாபாரத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் கருதுகிறாராம். அதனால் அஜீத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா நடிப்பதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.