'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை அனுஷ்கா தெலுங்கில் 2005ல் நாகார்ஜுனா நடித்த சூப்பர் படம் மூலமும், 2006ல் தமிழில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு படம் மூலமும் அறிமுகமாகி திரையுலகில் கிட்டத்தட்ட 19 வருடங்களை கடந்து விட்டார். பாகுபலி படத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் புகழும் பெற்று விட்டார். இந்த நிலையில் ஐம்பதாவது படம் என்கிற மைல்களையும் தற்போது தொட்டுள்ளார் அனுஷ்கா. இதற்கு முன்னதாக அனுஷ்கா நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் அனுஷ்காவிற்கு ஓரளவு வெற்றி படமாக அமைந்த நிலையில் அனுஷ்காவின் இந்த ஐம்பதாவது படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய படமாக உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்குகிறார். கடந்த 2010ல் அனுஷ்காவின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் விதமாக வெளியான வேதம் படத்தை தொடர்ந்து 15 வருடங்கள் கழித்து அனுஷ்காவின் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் கிரிஷ். ஷீலாவதி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒடிசாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் கடந்த இரண்டு வருடங்களாக பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தை கிரிஷ் இயக்கி வந்தார். சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாமல் தள்ளித்தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் அந்த படத்தை அப்படியே தள்ளி வைத்துவிட்டு அனுஷ்காவின் படத்தை இயக்கத் துவங்கி விட்டார் இயக்குனர் கிரிஷ்.