கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' |
நடிகர் அர்ஜுன் திரையுலகில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு வெளிச்சம் போட்டு தரும் விதமாக அவரை கதாநாயகியாக வைத்து சொல்லி விடவா என்கிற படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்க, வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென்-ஐ கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க தயாரானார். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே அர்ஜுனுக்கும், விஸ்வக் சென்னுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.
விஸ்வக் சென் தனது தொழில் மீது சரியான மரியாதை செலுத்தும் நபராக இல்லை என்றும், சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற முடியாத நபர் என்றும் அந்த சமயத்தில் அர்ஜுன் அவர் மீது பரபரப்பாக குற்றம் சாட்டினார். அதேசமயம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக படம் குறித்து இன்னும் சில விஷயங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு நாள் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என விஸ்வக் சென் கேட்டதால் கோபமான அர்ஜுன் படத்தை நிறுத்திவிட்டார் என்று அவரது தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த பிரச்சனை பற்றி மனம் திறந்த விஸ்வக் சென் கூறும்போது, “எனக்கு திரை உலகில் சரியான பின்புலம் இல்லாததால் தான் என்னுடைய குரல் யாருக்கும் கேட்காமல், என் மீது தான் தவறு என்பது போன்று சித்தரிக்கப்பட்டு விட்டது. இதுவே திரையுலக பின்னணி கொண்ட ஒருவருக்கு நடந்திருக்குமா, அவரிடம் அர்ஜுன் இப்படி நடந்து கொண்டு இருப்பாரா என்றால் நிச்சயமாக இருக்காது.
இத்தனைக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நான் கூறவில்லை. சில விஷயங்களை முன்கூட்டியே தெளிவுபடுத்திக் கொண்டு ஒரு நாள் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறினேன். ஆனால் என் வீடு தேடி வந்து என் பெற்றோர்கள் முன்னிலையில் அர்ஜுன் என்னை கடுமையாக பேசிவிட்டார். ஒரு கெட்ட படத்தில் நடிப்பதை விட ஒரு கெட்ட நாளை எதிர்கொண்டு சென்று விடுவது நல்லது. இத்தனைக்கும் அந்த படத்திற்காக நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இருமடங்காக அர்ஜுனிடம் திருப்பி தந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.