பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
மருது படத்திற்காக தன்னுடைய ஹேர் டைலை மாற்றிக் கொண்டிருந்தார் விஷால். அவரது ஹேர்டைலைப்போலவே, 'தெறி' படத்திற்குப் பிறகு தற்போது நடித்துவரும் தனது 60 ஆவது படத்திற்காக ஹேர் ஸ்டைல் செய்து நடித்து வருகிறார் விஜய். 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன், இப்படத்தை இயக்கி வருகிறார். 'அழகிய தமிழ் மகன்' படத்துக்குப் பின் தற்போது 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் பரதன்.
மதுரை பின்னணியில் 'அழகிய தமிழ் மகன்' படத்தின் கதையை அமைத்திருந்தார் பரதன். தற்போது இயக்கும் 'விஜய் 60' படத்திற்காக திருநெல்வேலி பின்னணியில் கிராமத்துப்படமாக கதையை அமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை பூந்தமல்லியில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். பின்னர், 'தெறி' படத்தின் வெளியீடு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது முழுவீச்சில் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெறுகிறது. வாக்களிப்பதற்காக சென்னை வந்த விஜய் உடன் திருநெல்வேலி திரும்பி செல்கிறார்.