ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்த விக்ரம் பிரபு அதையடுத்து நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் வாகா படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரருக்கும், பாகிஸ்தான் பெண்ணுக்குமிடையே உருவாகும் காதல் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராய் நடித்துள்ளார். தவிர, சில பாகிஸ்தான் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஏப்ரல் 18-ந்தேதி ஆடியோ விழா நடக்கிறது. இந்த விழாவில் கமல் கலந்து கொண்டு பாடல்களை வெளியிடுகிறாராம். மேலும், விக்ரம்பிரபுவின் சகோதரரான மச்சி துஷ்யந்த் தயாரித்து வரும் மீன்குழம்பும் மண்பானையும் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சமீப காலமாக சிவாஜி குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட படங்களில் கமலின் பங்களிப்பும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.