தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” |
வெகுளித்தனமான வேடங்களில் அதிகமாக நடித்தவர் ஊர்வசி. கிளாமரை பெரிதும் நம்பாமல் தனது பர்பாமென்ஸை மட்டும் நம்பி நடித்து வந்துள்ள இவர், சமீபகாலமாக அம்மா மற்றும் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே பல மாஜி ஹீரோயின்கள் களத்தில் நின்றபோதும் ஊர்வசிக்கென்று ஒரு இமேஜ் இருப்பதால் அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் கிடைத்து வருகிறது.
குறிப்பாக, வணக்கம் சென்னை, பேச்சியக்கா மருமகன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், உத்தமவில்லன், இஞ்சி இடுப்பழகி படங்களுக்குப்பிறகு தற்போது நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் பெரும்பாலும் அம்மா வேடங்களிலேயே நடித்து வரும் ஊர்வசிக்கு இஞ்சி இடுப்பழகி படத்தைப்போன்று அழுது நடிக்கும் செண்டிமென்ட் காட்சிகளும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால், சமீபகாலமாக ஓவராக க்ளிசரின் போடும் நடிகைகளை இளவட்ட ரசிகர்கள் ரசிப்பதில்லை என்பதால், செண்டிமென்டை கொஞ்சம் கம்மி பண்ணி, காமெடியை கொஞ்சம் ஜாஸ்தி பண்ணுங்கள் என்று டைரக்டர்களிடம் தனது சார்பில் கேட்டுக்கொள்கிறாராம் ஊர்வசி. அதோடு, டைரக்டர்கள் டயலாக் பேப்பரை கொடுத்ததும் வாங்கி படிப்பவர், பின்னர் தனது பாணிக்கு பேசுவதற்காக சில வார்த்தைகளையும் கலந்து பேசி நடிக்கிறாராம். அதில் காமெடி வசனங்களையும் தூக்கலாக கலந்து விடுகிறாராம் ஊர்வசி.