வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛கூலி' படம் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் ஆகிறது. ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த மாதம் இறுதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூலி பட பாடல் வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரஜினி பேச்சுக்காக, அவர் சொல்லப்போகும் தத்துவ விஷயங்களுக்காக ஆவலாக காத்திருந்தனர். ஆனால், இந்த மாதம் பாடல் வெளியீட்டு விழா நடக்கவில்லை. சில காரணங்களால் தள்ளிப்போகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
என்னாச்சு என்று விசாரித்தால், இசை வெளியீட்டு விழா தள்ளிப்போக அனிருத்தும் ஒரு காரணமாம். அவர் இசை வேலைகளை முடிக்கவில்லை. பட ரிலீஸ் தேதி நெருங்குவதால் அதற்காக பணிகளில் பிஸியாக உள்ளாராம். தவிர, இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடக்கும் ஒரு இசை கச்சேரிக்கும் அவர் தயாராகிறார். அதனால், விழா தள்ளிப்போகிறது என்கிறார்கள். மற்ற இசையமைப்பாளர் என்றால் பிரஷர் கொடுத்து அனிருத்தை வேலை வாங்கலாம். ஆனால், அனிருத் என்பதால் அப்படி செய்ய முடியாதே என்று படக்குழு தத்தளிக்கிறதாம்.