நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜன்ட்' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வந்த 'டாகு மகாராஜ்' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஊர்வசி நேற்று அவருடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அதற்காக வைரத்தால் ஆன ஆடையை அணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீளமான கவுன் ஒன்றில் வைரங்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பட்டதாக அந்த ஆடை உள்ளது.
“நீங்கள் அனைவரும் என்னுடன் இருந்து பரிசுகள், வாழ்த்துகளைத் தந்ததற்கும், அன்பைப் பொழிந்ததற்கும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, என் மனதில் இருந்து நன்றி,” என நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் எப்படிப்பட்ட பேஷனான ஆடைகள் அணிவது என்பது நடிகைகளுக்குள் இருக்கும் முக்கியமான ஒரு போட்டி. ஊர்வசியின் இந்த வைர ஆடை, பேஷன் ஆர்வலர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.