ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி முடிவடைந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக 'கபாலி' படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ரஜினிகாந்த் தற்போதுதான் மலேசியா சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறப்பட்டார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார். மலேசியாவில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. அதன் பிறகு கடைசி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள்.
நவம்பர் மாதம் முழுவதும் ரஜினிகாந்த் 'கபாலி' படப்பிடிப்பில்தான் கலந்து கொள்ள உள்ளார். அதன் பிறகு சிறிது ஓய்விற்குப் பிறகு 'எந்திரன் 2' படப்பிடிப்பில் டிசம்பர் 15 முதல் கலந்து கொள்ள உள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் 'கபாலி' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.