ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'சாமி சரணம்' என சொல்லிக்கொண்டே 'தூள்' படத்தில் எதிரிகளை அடித்து வெளுக்கும் போலீஸ் அதிகாரியாக தமிழ் ரசிகர்களின் மனதில் நுழைந்தவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன். ஆனால் தமிழ் சினிமாவில் இவரது வரவு அதற்கும் பல வருடங்களுக்கு முன்னரே, அதாவது 'தளபதி' படத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அதில் வில்லன் அம்ரிஷ் பூரியின் மகனாக நடித்தவர் சாட்சாத் மனோஜ் கே.ஜெயன் தான். இவருக்கும் மோகன்லாலுக்கும் இடையேயான நட்பு சக நடிகர்கள் என்பதையும் தாண்டி கடவுள் - பக்தன் என்கிற அளவிலானது என்று சொன்னால் அது மிகையில்லை..
அதற்கு காரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் மனோஜ் கே.ஜெயன். 15 வருடங்களுக்கு முன் 'பிரஜா' என்கிற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்தார் மனோஜ் கே.ஜெயன். அப்போது மோகன்லால் எர்ணாகுளம் தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தார். மனோஜ் வீட்டில் இருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மனோஜின் நண்பர்கள் இருவர், மோகன்லாலை பார்த்து சில நிமிடங்கள் அவருடன் பேச விரும்பும் தங்களது ஆசையை மனோஜிடம் வெளிப்படுத்தினார்கள்.. நண்பர்கள் கேட்டதால் தட்டமுடியாமல் அரைமனதாக அவர்களை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றாராம் மனோஜ்.
ஆனால் ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஹால் ஒன்றில் சிலருடன் முக்கியமான மீட்டிங்கில் இருந்த மோகன்லால் மனோஜ் கே.ஜெயனை பார்த்து, பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து வந்து வரவேற்றாராம். உடன் வந்த நண்பர்களை அறிமுகப்படுத்த, அவர்களையும் வரவேற்று அவர்களுக்கு உணவு வரவழைத்து அவர்களுடன் நீண்ட நேரம் பேசி அனுப்பி வைத்தாராம். மோகன்லாலின் எளிமை கண்டு அசந்துபோன அன்றிலிருந்து நண்பர்களுக்கு மட்டுமல்ல மனோஜ் கே.ஜெயனுக்கும் மோகன்லால் ரியல் ஹீரோவாகி போனாராம்.
விஷயம் என்னவென்றால் இதற்குமுன் இப்படி ஒரு எளிமையான அணுகுமுறையை 'தளபதி' படத்தில் நடிக்கும் சமயத்தில் நம் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் மட்டுமே கண்டிருக்கிறாராம் மனோஜ் கே.ஜெயன் அதனால் தான் “எளிமையாக இருப்பதில் மோகன்லால் இன்னொரு ரஜினி” என இருவருக்குமே புகழாரம் சூட்டியுள்ளார் மனோஜ் கே.ஜெயன்.