Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி முருகன் டிரைலர் ஓர் பார்வை...!

04 செப், 2015 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Rajini-Murugan-Trailer-Review

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில், இமான் இசையமைப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரஜினி முருகன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று பிறந்த நேரமான 12 மணிக்கு வெளியிடப்பட்டது.


2 நிமிடம் 26 நொடிகள் கொண்ட அந்த டிரைலரில் படத்தில் என்ன இருக்கிறது என்ற விஷயத்தை விறுவிறுப்பாகவும், சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கு அந்த டிரைலரை 'கட்' செய்த படத் தொகுப்பாளரையும் பாராட்ட வேண்டும். அதோடு, டிரைலர் மிகவும் தெளிவாகவும், அழகான ஒளியமைப்புடனும் இருப்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தையும் சேர்த்தே பாராட்ட வேண்டும்.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக் கூட்டணி என்பதால் 'ரஜினி முருகன்' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு. ரசிகர்கள் மட்டும் டிரைலரை ஆவலுடன் எதிர்பார்க்கவில்லை, பல முன்னணி நடிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். டிரைலரைப் பார்த்ததுமே இது ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.


ஒரு அருமையான குடும்பப் பின்னணியில் நகைச்சுவை கலந்த கொண்டாட்டமான காதல் படம் இது என்பது மட்டும் டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது. சிவகார்த்திகேயன் வழக்கம் போலவே உற்சாகமாக நடித்திருக்கிறார். அவருடைய உற்சாகத்திற்கும் மேலும் உரமாக சூரியின் நகைச்சுவை நடிப்பும் அமைந்துள்ளது. அருமையான குணச்சித்திரத்திற்கு ராஜ்கிரண், மிரட்டலான வில்லத்தனத்திற்கு சமுத்திரக்கனி என புதிய கூட்டணி இந்தப் படத்தில் அமைந்துள்ளது.


அடுத்து குறிப்பிட வேண்டியது வசனங்கள்..


“உன்னலாம் பார்த்தால் கலாய்க்கணும்னு கூட தோணலடா...',


'ஆமா, எதுக்கு இப்ப திட்டிட்டு போறாளுங்க....


திருந்திடுவோமா...',


'எனக்கு யாரைப் பார்த்தாலும் என் ஆளப் பார்க்கிற மாதிரியே இருக்கு பங்கு...


கண்ணாடிய கழட்டிட்டுப் பாரு பங்கு, உன் ஆறேதான்...',


'நீங்களே காமெடி பண்ணிட்டால், அப்புறம் நான் எதுக்குடா...',


'நம்பி வாங்க, சந்தோஷமா போங்க' என டிரைலரிலேயே 'நச், பன்ச்' என சுவாரசியமான வசனங்கள் இடம் பெற்றுள்ளது.


'இது என்ன மாயம்' படத்தில் கீர்த்தி சுரேஷைப் பார்த்த ரசிகர்கள் 'அட....இந்தப் பெண்ணுக்கா இவ்வளவு வௌம்பரம்' என வருத்தப்பட்டவர்கள் 'ரஜினி முருகன்' டிரைலரைப் பார்த்தும் 'அட, என்னம்மா இருக்காயா...' என ஆச்சரியப்பட்டுப் போவார்கள். சிவகார்த்திகேயனுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, சயின்ஸ் எல்லாமே நன்றாகவே 'வொர்க் அவுட்' ஆகியிருக்கிறது.


ராஜ்கிரண், தாத்தா கதாபாத்திரத்தில் வருகிறார் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் வருகிறார். அவரை இன்னும் கூடுதலாகக் காட்டியிருக்கலாம். போகிற போக்கில் சமுத்திரக்கனியையும் முழு நேர வில்லனாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. சிவகார்த்திகேயன் - சூரி, பாலில் கலந்த தண்ணீர் மாதிரியே பிரிக்க முடியாத கூட்டணியாகியிருக்கிறார்கள்.


இமான் இசையில், யுகபாரதியின் வரிகளில் மீண்டும் ஒரு ஹிட் ரெடியாகியுள்ளது. “உன் மேல ஒரு கண்ணு, நான்தான் உன் மொறைப் பொண்ணு, உன்னோட இவள் ஒண்ணு, உன்னை மறந்தால் வெறும் மண்ணு....' பாடல் இந்த ஆண்டின் சூப்பர் மெலடியாக வரப் போவது உறுதி.


'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா....' பாடலை டிரைலரில் காணோமே...என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...மறந்துட்டீங்களா...


இயக்குனர் பொன்ராம், அடுத்த வசூல் வேட்டைக்குத் தயாராகிவிட்டார்.


ஆக, மொத்தத்தில் 'ரஜினி முருகன்' டிரைலர், வரப்போகும் சரவெடிக்கு ஒரு 'சாம்பிள்' வெடியாகவே இருக்கிறது...


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in