ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஸ்ரேயாவுக்கு கையில் படங்கள் இல்லை. ஆனாலும் லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். தப்பாக நினைத்துவிட வேண்டாம், நாம் சொல்ல வந்த விஷயமே வேறு...! மழை படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமான ஸ்ரேயாவுக்கு அடுத்து அடித்தது ஜாக்பாட். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நம்பர் ஒன் நாயகியானார். பிறகு ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. எனவே தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளில் பட வாய்ப்பு தேடினார்.
அங்கும் கூட அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. ஹிந்தியில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கின்ற வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. த்ரிஷ்யம் படம் வெளியாகிவிட்டநிலையில் இப்போதைக்கு ஸ்ரேயாவின் கைவசம் ஒரு படம் கூட இல்லை.
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் படு பிஸியாகவே இருக்கிறாராம் ஸ்ரேயா. மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஃபேஷன் ஷோக்கள் எங்கு நடந்தாலும் அங்கே கண்டிப்பாக ஸ்ரேயா ஆஜராகிவிடுகிறாராம். அதோடு, விருது வழங்கும் விழாக்களில் டான்ஸ் ஆடுவதிலும் செமத்தியாய் காசு பார்த்து வருகிறார்.