இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
உத்தமவில்லன், பாபநாசம் படங்களை தொடர்ந்து, கமல்ஹாசன், தற்போது தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. வரும் தீபாவளி அல்லது இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
அவ்வாறு, இந்த ஆண்டு இறுதி்க்குள் தூங்காவனம் படம் வெளியாகும் பட்சத்தில், 1995ம் ஆண்டுக்கு பிறகு, 20 ஆண்டுகள் கழித்து, ஒரே ஆண்டில் மூன்று படங்களை ரிலீஸ் செய்த பெருமை, கமலை சேரும்.
கமல், தன் தொடக்க காலத்தில், ஆண்டு ஒன்றிற்கு ஏழு, எட்டு படங்களில் எல்லாம் நடித்துள்ளார். பின் பெரிய நடிகரான பிறகு, படங்களின் அளவை படிப்படியாக குறைத்துக்கொண்டார்.
1995ம் ஆண்டில், சதிலீலாவதி, குருதிப்புனல் மற்றும் சுபசங்கல்பம் (தெலுங்கு) என அவரது நடிப்பிலான மூன்று படங்கள் வெளியாகின. அதற்குப்பின், 20 ஆண்டுகள் கழித்து, தற்போது தான், ஒரே ஆண்டில் 3 படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூங்காவனம் படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியானால், ஒரே ஆண்டில் 4 படங்கள் என அவரது சாதனையை, அவரை உடைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கமலின் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அதற்குப் பிறகான வேலைகளைத் தொடங்கிவிட்டார்களாம்.நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
கமல், தன் படத்திற்கு வாங்கும் சம்பளத்தை கணக்கிட்டால்,இந்தாண்டில் அதிகம் சம்பாதித்த நடிகர்களாக கமல் மட்டுமே இருப்பார்.