மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் இந்த அளவிற்கு சர்ச்சை ஏற்படுத்தியதே இல்லை என்று சொல்லுமளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'இந்தியன் 2'. இந்தியத் திரையுலகமே வியக்கும் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்பட்ட ஷங்கர், உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் 500 கோடி செலவில் படமெடுத்த ஒரே தயாரிப்பு நிறுவனம் எனப் பெயரெடுத்த லைக்கா ஆகியோர் இணைந்த 'இந்தியன் 2' முடியுமா, முடியாதா என்பதே தெரியாத நிலையில் கமல்ஹாசனை அடுத்தடுத்து சில இரண்டாம் பாகப் படங்களைப் பற்றிய செய்திகள் துரத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு 'பஞ்சதந்திரம் 2' படம் பற்றி அதில் ஒரு கதாநாயகனாக நடித்த ஸ்ரீமன் ஒரு பதிவிட்டு பரபரப்பூட்டினார். அதோடு, கமல்ஹாசன் அவர் நடித்த சில முந்தைய படங்களின் இரண்டாம் பாகப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். அவற்றில் 'தேவர் மகன் 2, வேட்டையாடு விளையாடு 2,' என சில படங்களும் அடக்கம். அவையெல்லாம் நடக்குமா என்பதும் தெரியாது.
இப்போது கமல்ஹாசன் 'பாபநாசம் 2' படத்தை ஆரம்பிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் தமிழில் ரீமேக்காகி 'பாபநாசம்' ஆக வெளிவந்தது. 'த்ரிஷ்யம் 2' கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து அதை தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கி முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப்.
மலையாளம், தெலுங்கைப் போலவே தமிழிலும் 'பாபநாசம் 2' படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ஜீத்து. ஆனால், முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த கௌதமிக்குப் பதிலாக இரண்டாம் பாகத்தில் மீனா அல்லது வேறொருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று கமல் விரும்புகிறாராம்.
தற்போது 'இந்தியன் 2, விக்ரம்' ஆகிய படங்கள் கைவசம் உள்ள நிலையில் 'பாபநாசம் 2' எப்படி டேக்-ஆப் ஆகும் என்பது கமல் கையில்தான் உள்ளது என்கிறார்கள்.