தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். வருகிற 18ம் தேதி ஓடிடி தளத்தில் படம் வெளிவருகிறது. படத்தின் குழுவினர் நேற்று ரசிகர்களுடன் இணைய தளம் வாயிலாக உரையாடினார்கள். அப்போது தனுஷ் பேசியதாவது:
படம் மக்களை சென்று சேர்வதில் சந்தோஷம்தான். என்றாலும் இன்னும் ஒரு சிறந்த தளத்தில் (தியேட்டர்கள்), சிறந்த நேரத்தில் இது வெளியாகி இருக்கலாம் என்ற சின்ன வருத்தம் இருக்கிறது. என்றாலும் ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை இந்த படம் சந்தோஷப்படுத்தப்போகிறது என்பதை நினைக்கும்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது.
இந்த படத்தில் எனது கேரக்டரான சுருளி எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். படப்பிடிப்பு நடக்கும்போதே இதன் தொடர்ச்சியை கொண்டு வாருங்கள் என்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்த படம் எனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
பொதுவாக எனது படங்கள் பற்றி எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தாலும் அதை மனதுக்குள் வைத்துக் கொள்வேன், வெளியில் சொல்ல மாட்டேன். இந்த படம் பற்றி நான் தைரியமாக வெளியில் சொல்வேன். கார்த்திக் சுப்பராஜின் பெஸ்ட்டாக இந்த படம் இருக்கும். சந்தோஷ் நாராணயன் பாடல்களை விட பின்னணி இசைக்கு கடுமையாக உழைத்திருக்கிறார். அது படம் பார்க்கும்போது தெரியும்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.