'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜே.எப்.எல். புரொடக்ஷன் சார்பில் ஜே.கே. தயாரிக்கும் படம் லாகின். இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் ப்ரீத்தி நடிக்கிறார்.
சினிமாவுக்கு வந்தது பற்றி ப்ரீத்தி கூறியதாவது: எனது சொந்த ஊர் சிதம்பரம். அப்பா வெளிநாட்டு பிசினஸ் மேன். நானும், என் அண்ணனும் படிக்கிறதுக்கு வசதியாக சென்னையில் குடியிருக்கோம். என்னோட அம்மா சரியான சீரியல் பைத்தியம். ஒரு சீரியல் விட மாட்டாங்க. நான் நல்லா படிச்சு மார்க் எடுத்துட்டு போவேன் என்னை பாராட்டாமல் சீரியல் நடிகைகள் பற்றி புகழ்ந்து பேசிட்டு இருப்பாங்க.
அம்மாவோட பாராட்ட வாங்குறதுக்காகவாவது சீரியல்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். என்ஜினீயரிங் படிச்சு முடிச்சிட்டு ஐடி வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருந்தப்போ என்னோட போட்டோவை சில ஏஜென்சிக்கிட்ட கொடுத்து சீரியல் வாய்ப்பு வந்தா சொல்லுங்கனுன்கு சொல்லி வச்சிருந்தேன்.
திடீர்னு ஒரு நாள் ஏஜென்சி போன் பண்ணி சினிமால நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. அப்படி வந்த வாய்ப்புதான் லாகின் படம். டைரக்டர் எதிர்பார்த்த முக அமைப்போட இருந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்தது. இப்போது நிறைய சீரியல் வாய்ப்பு வருகிறது. என்றாலும் லாகின் வெளிவந்து மக்களிடம் எப்படியான வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்து தான் இனி சீரியலா, சினிமாவா என்று முடிவு செய்ய இருக்கிறேன் என்றார்.