அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் |
1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா, இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இருக்கிறார். மீனாவை 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாவில் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக சமீபத்தில் கேள்வி பதில் பகுதி நடத்தினார்.
இந்த பகுதியின்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி பதில் அளித்தார் மீனா. தன்னிடம் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்த மீனா, ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார். மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக பதிலளித்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் படத்தை பகிர்ந்து கொஞ்சம் லேட் என்று வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார். இதுதவிர அவர் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள், திரைப்படத் துறை அனுபவம் மற்றும் அவரது மகள் நைனிகா பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தனது வயதை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகருக்கு “பெண்களின் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று பதில் அளித்துள்ளார். மற்றொரு ரசிகர் என்னைக்காவது சினிமாவுக்கு எதுக்காக வந்தோம்னு வருத்தப்பட்டு இருக்கீங்களா.? என்று எழுப்பிய கேள்விக்கு "பல தடவை" என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறி உள்ளார்.
மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி ஆவ் என்று குறிப்பிட்டுள்ளார் மீனா. தனுஷ் அல்லது சிம்பு இருவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என்று பதில் அளித்துள்ளார்.
தமிழில் பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறி உள்ளார்.