ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் ஸ்ரீமந்துடு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மகேஷ் பாபு ஆர்வமாக பங்கெடுத்து வருகின்றார். கடந்த சில நாட்களாக டோலிவுட் மீடியாக்களைச் சந்தித்து வரும் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படம் குறித்த சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் புலி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது நடிகர் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் ஸ்ரீமந்துடு படத்தின் புரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக ஸ்ருதிஹாசன் விரைவில் ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார்.