அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் | வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா |
ஒரு படம் உண்மையான வெற்றி பெற்றால் அவர்களே வெற்றியைக் கொண்டாடிக் கொள்வார்கள். ஆனால், வெற்றி பெற திணறிக் கொண்டிருந்தால் பத்திரிகையளார்களை அழைத்து படம் வெற்றி என மக்களுக்கு சொல்லச் சொல்வார்கள். அந்த வகையில் 'பாபநாசம்' படக் குழுவினர் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், அவர்களுக்குள்ளாகவே கொண்டாடிக் கொண்டுள்ளார்கள்.
அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கமல்ஹாசன், கௌதமி, இயக்குனர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், படத் தயாரிப்பாளர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் என சில முக்கிய புள்ளிகளே கலந்து கொண்டுள்ளனர். 'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்து கொஞ்சம் வாடிப் போயிருந்த கமல்ஹாசனுக்கு 'பாபநாசம்' படத்தின் வெற்றி மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். படம் வெளிவருவதற்கு முன் அவருடைய ஒட்டு மீசை பற்றியும், கௌதமியை ஜோடியாக்கியது பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனாலும், அதையும் மீறி மக்கள் படத்தை ஏற்றுக் கொண்டது அவருக்கு தனிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.
அந்த உற்சாகத்தில் 'தூங்காவனம்' படத்தையும் சீக்கிரமே முடித்து வெளியிடும் முனைப்பில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.