காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழ்த்திரை விருட்சம் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படம் கிடா பூசாரி மகுடி. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்க, தமிழ், நட்சத்திரா, பவர்ஸ்டார் உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக, பவர்ஸ்டார் சீனிவாசன், ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்று சலூன் கடை ஓனராக ரஜினியின் அதே கெட்டப்பில் நடித்திருக்கிறார். கிராமத்து கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். முக்கியமாக, முதலில் இந்த படத்துக்கு இசையமைக்க ஒத்துக்கொள்ளாத அவர், படப்பிடிப்பு நடந்த பிறகு அந்த படத்தை போட்டு பார்த்த பின்னரே ஓகே சொல்லி இசையமைத்துள்ளார். கூடவே பட நாயகனுக்காக ஒரு டூயட் பாடலில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் இளையராஜா. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஒரு பெரிய நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட்டால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்பதால் சில முன்னணி பட நிறுவனங்களிடம் பேசி வந்தனர். இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் கிடா பூசாரி மகுடி படத்தை வெளியிட முன்வந்துள்ளதாம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வருகிறதாம்.