‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களை பட்டப் பெயர்களை வைத்து குறிப்பிடும், அழைக்கும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. ஒரு ஹீரோ அறிமுகமாகி சில பல ஹிட்டுகளைக் கொடுத்ததும் அவர்களைக் குளிர்விக்க சிலரால் சூட்டப்படும் பெயர்கள்தான் அவை.
தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் இந்த பட்டப் பெயர்களால் ஹீரோக்களை குறிப்பிடுவது இருந்து வருகிறது. 'பவர் ஸ்டார்' என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
2019 சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் அவரது கட்சி போட்டியிட்டு பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பவன் கல்யாண் தோற்றுப் போனார். இருந்தாலும் தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இனி திரைப்படங்களில் தன் பெயருக்கு முன்னால் 'பவர் ஸ்டார்' என்ற பட்டப் பெயரைப் போட வேண்டாம் என சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. அதற்கான காரணம் நேற்றுதான் தெரிந்தது.
பவன் கல்யாணின் அக்கா மகன் சாய் தரம் தேஜ் நடித்து வெளிவர உள்ள 'ரிபப்ளிக்' படத்தின் விழாவில் நேற்று கலந்து கொண்டு பவன் பேசுகையில், “நீங்கள் எப்போதெல்லாம் 'பவர் ஸ்டார்' என்று குரல் எழுப்புகிறீர்களோ, அப்போதெல்லாம், 'பவர்' இல்லாமல் எதற்கு 'பவர் ஸ்டார்' என அழைக்கப்பட வேண்டும் என யோசித்துள்ளேன். உங்களால் 'முதல்வர்' என்று அழைக்கப்படுவதற்காக நான் இங்கு இல்லை,” என கோபமாகப் பேசினார்.
இவ்வளவு ரசிகர்கள் இருந்தும், தேர்தலில் தோல்வியுற்றுது குறித்தும், ஆட்சியைப் பிடிக்க முடியாதது குறித்தும் குறிப்பிட்டுத்தான் அவர் அப்படி பேசியுள்ளதாக டோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் 'அல்டிமேட் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வந்த அஜித்குமார், அந்தப் பட்டப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என எப்போதோ சொல்லிவிட்டார். பட்டப் பெயரை இப்போது பயன்படுத்தாத ஒரே தமிழ் சினிமா ஹீரோ அஜித் தான். ஆனாலும், அவரை ரசிகர்கள் 'தல' என்று மட்டும் அழைத்து வருகிறார்கள்.