ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரஜினிகாந்த் புதிய படம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்து விட்டது. படத்தை இயக்குபவர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றியும், படப்பிடிப்பு, எங்கு, எப்போது நடக்கப் போகிறது என்பது பற்றியும் அறிவித்து விட்டார்கள். ஆனால், இன்னும் ரஜினிகாந்த் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை அறிவிக்கவில்லை. ரஜினிகாந்த் ஜோடியாக தமிழில் இப்போது இருக்கும் நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரைப் பொருத்தமானவர்கள் என சொல்லலாம். ஆனால், அனுஷ்கா 'லிங்கா' படத்தில் நடித்துவிட்டார். நயன்தாரா 'சந்திரமுகி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக 10 வருடங்களுக்கு முன்பு நடித்திருந்தார். அதன் பின் அவருடன் நடிக்கவில்லை.
ஆனால், ரஜினிகாந்த் ஜோடியாக அவர் நடித்த கடைசி நான்கு படங்களில் வட இந்திய நடிகைகளான ஸ்ரேயா 'சிவாஜி' படத்திலும், ஐஸ்வர்யா ராய் 'எந்திரன்' படத்திலும், தீபிகா படுகோனே 'கோச்சடையான்' படத்திலும், சோனாக்ஷி சின்ஹா 'லிங்கா' படத்திலும் நடித்திருந்தனர். அதனால், அவர்கள் வரிசையில் தற்போது நடிக்க உள்ள புதிய படத்தில் வட இந்திய நடிகைகளில் யாரையாவது நடிக்க வைக்கப் போகிறாரா அல்லது தென்னிந்திய நடிகைகளில் யாரையாவது நடிக்க வைக்கப் போகிறரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் போட்டியில் இப்போது பல பெயர்கள் அடிபடுகிறது. அவர்களில் அநேகமாக வித்யா பாலன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த வித்யா பாலன் தமிழ்ப் படங்களில் நடிக்க முயன்று ஒதுக்கப்பட்டு, பின்னர் டிவியில் நுழைந்து ஹிந்தித் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். தன்னை வேண்டமென்று ஒதுக்கிய தமிழ்த் திரையுலகமே வேண்டாமென்று அவர் எப்போதோ முடிவெடுத்து விட்டார் என்றும் சொல்வார்கள். ஆனால், ரஜினிகாந்துக்காக அவரது முடிவை மாற்றிக் கொள்வாரா?, உண்மையிலேயே வித்யா பாலனை படக்குழுவினர் அணுகினார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.