நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு |
ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு, ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிங்கா படத்திற்கு பிறகு, ரஜினி காமெடி படத்தில் நடிக்க உள்ளார். அந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மெட்ராஸ் பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளது கி்ட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜூன் மாதம் 10ம் தேதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் மலேசியாவைச் சேர்ந்த டான் வேடத்தில் ரஜினி நடிக்கிறாராம். அவருக்கு ஜோடி இல்லை என்று முதலில் கூறப்பட்டது. இப்போது நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும், ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் டூயட் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.