வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
நேரம், சூதுகவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. நடித்த சில படங்களிலேயே சிறந்த நடிப்புக்காக, ஜிகர்தண்டா படத்திற்காக இந்தாண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள பாபி பல படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது அவரது குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு சினிமாவில் களமிறங்கியுள்ளது. அவர் பெயர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பாபியின் சகோதரி ஆவார். உறவினர் வழியில் பாபி, இவருக்கு சகோதரி. அதுமட்டுமல்ல ரேஷ்மாவின் குடும்பமும் சினிமா பின்னணி உடையது தான். ரேஷ்மா தாத்தா, அப்பா ஆகியோர் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். இதயத்தை திருடாதே, போன்ற பல படங்களை தயாரித்துள்ளார் ரேஷ்மாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பிரசாத்.
தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அனைத்தையும் அமெரிக்காவில் முடித்து விட்டு, ஒன்றரை ஆண்டுகள் சர்வதேச விமானங்களில் ஏர்ஹோஸ்டராகவும் பணியாற்றியுள்ளார் ரேஷ்மா. பிறகு சென்னை வந்த ரேஷ்மா, ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர், வம்சம், வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்தார். அதிலும் வம்சம் தொடரில் டாக்டர் சுப்ரியா கேரக்டர் பண்ணியவர் இவர் தான். அதனால் இவருக்கு சுப்ரியா என்ற பெயரே பிரபலமானது.
ரேஷ்மா இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி பயணித்திருக்கிறார். அதாவது சின்னத்திரையிலிருந்து, வௌ்ளிதிரைக்கு உயர்ந்துள்ளார். புதியவர் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில், தனது சகோதரர் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்து வரும் ''மசாலா படம்'' என்ற படத்தில் மூன்றாவது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஹீரோயினாக நடிப்பது பற்றி ரேஷ்மா கூறியதாவது, தமிழில் நான் நடிக்கும் முதல் படம் ''மசாலா படம்''. இந்தப்படம் மிகவும் வித்தியாசமானது. காதல், காமெடி, ஆக்ஷ்ன் என மூன்று விதமான கதையில் இப்படம் பயணிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரே படத்தில் மூன்று விதமான கதைகளில் உருவாகிறது. இதில் ரொமான்ஸ் போர்ஷனில் நான் நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக கௌரவ் என்பவர் நடிக்கிறார். மசாலா படம் தவிர, மலையாளத்தில் துளசி தாஸ் இயக்கி வரும் ''கேர்ள்ஸ்'' என்ற படத்திலும் நடிக்கிறேன். இப்படம் தமிழிலும் இனிய நாட்கள் என்ற பெயரில் வௌியாக இருக்கிறது. இது தவிர தமிழில் சில படங்களில் நடிக்க பேசி வருகிறேன்.
இவர் உடன் தான், நடிப்பேன், அவர் உடன் தான் நடிப்பேன் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நல்ல கதையம்சம் உடைய படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் புதுமுகங்களோ அல்லது ஏற்கனவே பீலடில் இருக்கும் ஹீரோக்களோ யாராக இருந்தாலும் அவர்களுடன் நடிப்பேன். அதேசமயம் நான் மாடர்ன் டிரஸில் வந்தாலும் கவர்ச்சிக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுவேன், அது நமக்கு செட்டாகாது, தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதே என் இலக்கு, இனி சினிமாவில் எனது முழு பயணமும் தொடரும் என்றார் ரேஷ்மா.