பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தற்போது தமிழ் சினிமாவில் இசையமைத்து வருபவர்களில் டி.இமான் குறிப்பிடத்தக்கவர். சமீபகாலமாக இவர் தொடுகிற டியூனெல்லாமே ஹிட்டாகி வருகிறார். அந்தவகையில், சின்ன படம், பெரிய படம் என்பதில்லாமல், அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை செலுத்தி, படத்துக்குப்படம் ஹிட் பாடல்களை கொடுத்து முன்வரிசையில் வந்து அமர்ந்திருக்கிறார் இமான். விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையே பெறவில்லை. 10 ஆண்டுகளுக்குப்பிறகு சமீபத்தில் ஜில்லாவுக்கு இசையமைத்து மீண்டும் விஜய்யுடனான நட்பை புதுப்பித்துக்கொண்டார் இமான்.
மேலும், சிலரைப்போன்று தனது இசையில் முன்னணி பாடகர்-பாடகிகள்தான் பாட வேண்டும் என்றும் அவர் நினைப்பதில்லை. வித்தியாசமான குரலாக இருந்தால் போதும் அது பட்டிதொட்டிகளில் பாடிக்கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை தேடிப்பிடித்து கூட்டி வந்த சான்ஸ் கொடுக்கிறார் இமான். அதோடு, விஜய் டிவி போன்ற சேனல்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அங்கு பாடும் பாடகர்-பாடகிகளின் குரல் இனிமையாக இருந்தால் அவர்களை அழைத்து வந்து சான்ஸ் கொடுத்து பாடகர்களாக்கி விடுகிறார்.
அதனால், இப்போது டி.இமானின் இசைக்கூடாரத்தை நோக்கி இளவட்ட பாடகர்-பாடகிகளின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அதேசமயம், முன்னணி பாடகர்கள், இப்படி புதியவர்களுக்கு இமான் சான்ஸ் கொடுத்து வருவதால் தங்களுக்கான வாய்ப்புகளை குறைத்து விட்டாரே என்று அவர் மீது உள்ளூர அதிருப்தியில் உள்ளனர்.