புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி,விழா என்று அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு. இன்றைய புதுநடிகைகள் எல்லாம் அவரைப்பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.