ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நீண்ட இடைவேளைக்குப்பிறகு கே.ஆர்.விஜயா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் சுவடுகள். மோனிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஜெயபால் இயக்கி நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்துக்காக கே.ஆர்.விஜயா, மோனிகா இடம்பெறும் ஒரு காட்சி படமானது. அதை 40 அடி உயரத்தில் இருந்தபடி படமாக்கிகொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து ஈர மண்ணாக இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டு, கேமராமேன் அமர்ந்திருந்த கிரேன் கீழே சரிந்தது. அப்போது கீழே நடித்துக்கொண்டிருந்த கே.ஆர்.விஜயா, மோனிகாவை நோக்கி கிரேன் வந்தது.
அப்போது கூடிநின்ற யூனிட் நபர்கள் ஓடிச்சென்று கிரேனை தாங்கிப்பிடித்துக்கொண்டனர். இதனால் பெரும் ஆபத்தில் இருந்து கே.ஆர்.விஜயா, மோனிகா இருவரும் உயிர் தப்பினார்களாம். இதையடுத்து அதே காட்சியை வேறு பகுதிக்கு சென்று படமாக்கினார்களாம். ஆனால், அன்று முழுக்க அவர்கள் இருவருமே பதட்டத்துடன் காணப்பட்டார்களாம்.