Advertisement

கே.ஆர்.விஜயா

Birthday
30 Nov 1938 (Age )

பழனியில் பிறந்த நடிகை கே.ஆர்.விஜயா, 1963ம் ஆண்டு கற்பகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ் ரசிகர்களின் மனதில் புன்னகை அரசி என்ற பெயரையும் பெற்றுள்ளார். சில கன்னட மற்றும் இந்திய படங்களிலும் இவர் நடித்துள்ளார். சரஸ்வதி சபதம், தீர்க்க சுமங்கலி, நெஞ்சிருக்கும் வரை, இதயகமலம், தங்க பதக்கம், பஞ்சவர்ணக்கிளி, சர்வர் சுந்தரம், திரிசூலம் உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் குறிப்பிடக்கூடியதாகும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ள இவர், ஏராளமான பக்தி படங்களில் அம்மன் வேடத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் தவிர சில டிவி தொடர்களிலும் கே.ஆர்.விஜயா நடித்துள்ளார்.