வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஸ்வேதா மேனன் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடங்களில் மலையாள திரையுலகில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெண்களுக்கான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட போவதாக கூறி இருந்தார் ஸ்வேதா மேனன்.
2018ல் திரையுலகில் பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து விசாரிப்பதற்காக கேரளா அரசால் நீதிபதி ஹேமா கமிஷன் அமைக்கப்பட்ட போது இந்த பிரச்சனை தொடர்பாக நடிகைகள் பலர் ஒரு ஹோட்டலில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசி விவாதித்தனர். அந்த நிகழ்வு முழுவதும் ஒரு வீடியோவாக எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த மெமரி கார்டு தொலைந்து விட்டது என அப்போது இருந்த நிர்வாகிகள் அலட்சியமாக தெரிவித்தனர். இந்த நிலையில் தான் ஸ்வேதா மேனன் தலைமை பொறுப்புக்கு வந்ததும் அந்த மெமரி கார்டை தேடிக் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அவர் அறிவித்துள்ளார். இந்த குழுவில் அவரும் ஒருவராக பங்கேற்றுள்ளதுடன் இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாட்ஷா வில்லன் நடிகரான தேவனையும் தன்னுடன் உதவிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார் என்பது தான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல இந்த பாலியல் அத்துமீறல் குறித்து பிரச்னை கிளப்பிய நடிகைகள் அனைவருக்குமே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களிடம் ரகசிய விசாரணையை செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் இது குறித்த அறிக்கை நடிகர் சங்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஸ்வேதா மேனன் அறிவித்துள்ளார்.




