கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
தெலுங்கில் ஜெர்சி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் நாகவம்சி. அவரது தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் மாஸ் ஜாதரா. இதில் ரவிதேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகவம்சி சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற லோகா படம் குறித்து கொஞ்சம் காட்டமாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசும்போது, “லோகா திரைப்படத்தை நேரடியாக தெலுங்கில் எடுத்து ரிலீஸ் செய்திருந்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெற்றிருக்காது. ரசிகர்களும் படத்தில் ஆயிரம் குற்றம் குறைகளை கண்டுபிடித்து இருப்பார்கள். ஆனால் வேறு மொழியில் இருந்து இங்கே வெளியானதால் அந்த படத்தை ரொம்பவே ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களின் மனநிலை என்ன என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.