பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் 'ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் 'ஓ.ஜி' திரைப்படம் உருவாகியிருக்கிறது. வருகிற 25ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ஆந்திர மாநில அரசு சிறப்பு சலுகைகள் பலவற்றை வழங்கி உள்ளது. இந்த நிலையில், பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் ஓ.ஜி படத்துக்கான டிக்கெட்டை 1,29,999 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.
ஆந்திரா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் சவுட்டுப்பலில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டரில், ஓஜி படத்தின் அதிகாலை 1 மணி காட்சிக்கான முதல் டிக்கெட் ஏலம் விடப்பட்டது. சஷட்டுப்பால் மண்டலத்தின் லக்காரம் கிராமத்தைச் சேர்ந்த அமுதலா பரமேஷ் என்ற ரசிகர், 1,29,999 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
இந்த ஏலத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் விளம்பரத்திற்கான ஒரு யுக்தி என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.