ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னணி இளம் நடிகராக வளர்ந்துள்ளவர் விஜய் தேவரகொண்டா. தனக்கென ரவுடி என்கிற பெயரில் துணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு மிகவும் கை கொடுத்த படமாக அமைந்தது எவடே சுப்பிரமணியம் என்கிற படம் தான். அதை தொடர்ந்து வெளியான அர்ஜுன் ரெட்டி படம் தான் அவரை பிரபலமான ஹீரோவாக்கியது.
ஆனால் எவடே சுப்பிரமணியம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு புதிய உடைகள் வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் படப்பிடிப்பில் தான் பயன்படுத்திய உடைகளையே அணிந்து கொண்டு தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
புதிய படங்களில் அறிமுகமாகும் புதுமுகங்களுக்கு இருக்கும் போராட்டத்தைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதால் தான் தற்போது சமீபத்தில் வெளியான லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் குழுவினருக்கு தன்னுடைய சொந்த துணி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உடைகளை பரிசாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.