100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

உலகையே திரும்பி பார்க்க வைத்த அவதார் படம் 2009ம் ஆண்டு வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்தப் படம் வரவேற்பிலும், வசூலிலும் இதுவரை வெளியான படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.
இதன் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆப் வாட்டர் 2022ம் ஆண்டு வெளியானது. இதுவும் வசூல் சாதனை படைத்தது. முதல் பாகம் காடுகளின் பின்னணியிலும், இரண்டாம் பாகம் நீரின் பின்னணியிலும் இருந்தது.
தற்போது இதன் 3ம் பாகம் அவதார் பயர் அண்ட் ஆஷ் என்ற தலைப்பில் வெளிவருகிறது. இது நெருப்பின் பின்னணியில் உருவாகி உள்ளது. வருகிற டிசம்பர் 19ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 20யத் சென்ச்சுரி ஸ்டுடியோஸ், அக்டோபர் 2ம் தேதி 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' படத்தை மறு வெளியீடு செய்கிறது.
இந்த படம் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸூக்காக ஆஸ்கார் விருது வென்று உலகளவிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா நடித்த இந்தப் படத்தில் சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோரும் நடித்திருந்தனர்.
அவதார் படம் வெளிவருதற்கு முன்பு அதன் முந்தைய படத்தை மறு வெளியீடு செய்வது ஜேம்ஸ் கேமரூனின் வழக்கம். புதிய பாகத்தை புரிந்து கொள்ள முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.




