பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. இடையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்து, தற்போது வெப் தொடர், படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள சமந்தா, தொழில்முனைவோராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட சமந்தா, அவரது வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ஒரு நடிகராக உங்களது காத்திருப்பு காலம் மிகக் குறைவு என நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரங்கள் ஒரு மயக்கத்தை அளிக்கலாம், அது எல்லாமே நீங்கள்தான் என்றும் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை.
ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். ஆனால் அது உங்கள் சொந்த முயற்சியால் வந்தது மட்டுமே அல்ல. வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் எனது படங்களின் முடிவால், மகிழ்ச்சி சிதைக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது படங்களே வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
100 பிரச்னைகள் இருப்பதாக பலரும் நினைக்கும் சூழலில், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்குப் பிரச்னையாகத் தெரியும். எனது பிரச்னைகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல, விளையாட்டைத் தொடர்வதுதான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.