'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனர்கள் வரிசையில் பயணித்து வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் ஹிந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். தற்போது கூட அக்ஷய் குமார், சைப் அலிகான் இணைந்து நடித்து வரும் ‛ஹைவான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. தனது திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட நூறாவது படத்தை நெருங்கி விட்டார் இயக்குனர் பிரியதர்ஷன். இதனை தொடர்ந்து 100 படங்களை இயக்கியதும் இவர் ஓய்வு பெறுவார் என்பது போன்ற ஒரு பேச்சு சமீப நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து பிரியதர்ஷன் பேசும்போது, “நூறாவது படத்துடன் ஓய்வு பெறுவேன் என்று நான் எப்போதுமே சொன்னதில்லை. நினைத்ததும் இல்லை. ஓய்வு பெறுவது என்பது என்னுடைய உடல் நிலையை பொறுத்தது. என் உடல் நன்றாக ஒத்துழைக்கும் வரை நான் ஓடிக்கொண்டே இருப்பேன். படங்களை இயக்கிக் கொண்டே இருப்பேன். நூறாவது படத்தைப் பொறுத்தவரை இப்போது உறுதியாக சொல்ல முடிகின்ற ஒரே விஷயம் என்னவென்றால் அதில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதுதான். மற்றபடி நூறாவது படமாக என்ன இயக்கப் போகிறேன் என்பது கூட இப்போது வரை முடிவு செய்யவில்லை. காரணம் ஒரு படத்தில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது அடுத்த படத்தை பற்றி யோசிக்க மாட்டேன். இப்போது என் கவனம் முழுக்க ஹைவான் படத்தில் தான்” என்று கூறியுள்ளார்.