தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி |

செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ள படங்களின் எண்ணிக்கை கடந்த வார நிலவரப்படி 8 ஆக இருந்தது. அது தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளிவருவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு ஜுலை 18ம் தேதி 10 படங்கள் வெளிவந்தன. அந்த 10 படங்களும் ஏதோ வந்தது, போனது என்றே கடந்து போனது.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் முன்னணி நடிகர் என்று பார்த்தால் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தையும், அதர்வா நடித்துள்ள 'தணல்' படத்தையும், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'பாம்' படத்தையும் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படங்கள் என்று சொல்லலாம். மற்ற படங்களான, “அந்த 7 நாட்கள், தாவுத், காயல், குமார சம்பவம், மதுரை 16, உருட்டு உருட்டு, யோலோ” ஆகிய படங்கள் வளரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள் நடித்துள்ள படங்களாக இருக்கின்றன.
கடந்த வாரம் வெளிவந்த 'மதராஸி' படம் நன்றாகவே ஓடி வருவதால், இந்த வாரம் வெளியாக உள்ள இத்தனை படங்களுக்கும் எவ்வளவு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த வாரம் வெளியான படங்களுடன் இந்த வருடம் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 180ஐத் தொட்டுள்ளது. இந்த வாரப் படங்களுடன் சேர்த்தால் 190 ஆகிவிடும். இந்த மாதத்திற்குள் அது 200ஐக் கடந்துவிடும்.