ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் |
ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. அப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். எஸ். எஸ். கீரவாணி இசையமைத்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற படத்தை நீண்ட ரன்னிங் டைம் மற்றும் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் இடம் பெறாத மேலும் பல முக்கிய காட்சிகளையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி பல மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் டீசர் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இதே நாளில் 'வார்-2' மற்றும் 'கூலி' படங்கள் திரைக்கு வருகின்றன.